வெளிநாடு ஒன்றிலிருந்து வருகை தந்தவர்களை விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி அழைத்து பயணித்துக்கொண்டிருந்த ஹயஸ் ரக வாகனம் ஒன்று ஏ 9 வீதியின் 241 ஆவது கிலோமீற்றருக்கும் 242 ஆவது கிலோமீற்றருக்கும் இடைப்பட்ட பகுதியில் முன்னே சென்று கொண்டிருந்த பாரஊர்தி ஒன்றுடன் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த நால்வரும் உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார் சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0 Comments