(இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம்)
பல வருட கால வீரமுனை வரவேற்பு கோபுர அமைப்பது சம்பந்தமான தமிழ் முஸ்லிம் மக்களின் பிரச்சினைக்கு உடனடி தீர்வினை பெற்று கொடுக்க வேண்டும் என்பதற்காக 30/6/2024 ஞாயிற்றுக்கிழமை கிழக்குமாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சம்மாந்துறைக்கு விஜயம் செய்து குறித்த இடத்தினை பார்வையிட்டு கோபுரம் அமைக்கப்படும் இடத்திற்கும் வீரமுனை கோவிலுக்கும் உள்ள நில அளவினை அவதானித்த ஆளுனர்
தமிழ் முஸ்லிம் உறவுகளுக்கு இந்த கோபுரம் அமைப்பு சம்பந்தமாக எவ்வித சமூக பாதிப்பும் ஏற்படாத வண்ணம் இது தரப்பினரையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் காரியாலயத்தில் இடம் பெற்றது
மற்றும், குறித்த
கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏ.எல்.எம்.அதாவுல்லா, த.கலையரசன், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, போக்குவரத்து, நீர்ப்பாசனம், நீர் வழங்கல், கிராமிய வீடமைப்பு, கிராமிய மின்சாரம், கட்டிட நிர்மாண அமைச்சுக்களின் செயலாளர் எம்.கோபால இரத்தினம், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா, சம்மாந்துறை பிரதேச சபைச்செயலாளர் எம்.முகம்மட், வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைத்தவிசாளர் எம்.ஐ.எம் றனுஸ், முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் ஏ.சீ.எம்.சகில், சம்மாந்துறை பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், வீரமுனை கோவில் உறுப்பினர்கள், பல முக்கியஸ்தர் கலந்து கொண்டனர்
இடம்பெற்ற குறித்த கலந்துரையாடல் பற்றிய கருத்தை ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியதன் பின் கிழக்குமாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கருத்து தெரிவிக்கையில்
வீரமுனை வரவேற்பு கோபுரம் அமைப்பதில் தமிழ் முஸ்லிம் உறவுகளுக்கு மத உரிமை பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் செயற்பட வேண்டும் என்றும் இது சம்பந்தமாக உரிய அதிகாரிகளிடம் 1 மாதம் 10 நாட்களுக்குள் இதற்கான சரியான தீர்வை பெற்று தருவதாகவும் உறுதியளிக்கப்பட்டது
மற்றும் தமிழ் முஸ்லிம் மக்கள் எப்போதும் பிரிந்து செயற்பட கூடாது அனைவரும் சகோதரர்கள் போன்று பழக வேண்டும் என்றும் குறித்த கருத்தில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
ஊடகவியலாளர்
முபாறக் அஸ்லம்
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம்
0 Comments