பாட்டியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்றபோது, அப்பாட்டியின் போலியான பல் செட், கழன்று தொண்டையில் இறுகியமையால் அப்பாட்டி பரிதாபமாக மரணமடைந்த சம்பவமொன்று பலாங்கொடையில் இடம்பெற்றுள்ளது.
78 வயதான பாட்டியையே அந்த சந்தேகநபர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்றுள்ளார்.
முன்தாக திடீரென அந்த மர்ம ஆசாமி, பாட்டியின் வீட்டுக்குள் புகுந்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத அப்பாட்டி, கூச்சலிட்டு அக்கம் பக்கத்தவர்களை உதவிக்கு அழைக்க முயன்றுள்ளார்.
எனினும், பாட்டி சத்தம் போடுவதை தடுக்கும் வகையில் அந்த மர்ம ஆசாமி, அப்பாட்டியின் வாயை அடைத்து இறுக பிடித்துள்ளார். அப்போது, வாயிலிருந்த போலி பல்செட் கழன்று பாட்டியின் தொண்டை குழிக்குள் சென்றுள்ளது.
எனினும், கழுத்துடன் இறுக கட்டியணைத்து பிடித்திருந்த மர்ம ஆசாமியின் கைகளிலேயே பாட்டி தொங்கிவிட்டது. இதனை சற்றும் எதிர்பாராத நபர், அப்படியே விட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டார்.
அந்த பாட்டியின் சடலம், ஜூன் 27 ஆம் திகதி மீட்கப்பட்டது. பிரேத பரிசோதனைகள் ஜூன் 29ஆம் திகதியன்று மேற்கொள்ளப்பட்டது அதன்போதே, பாட்டியை பாலியல் துஷ்பிரயோகத்தக்கு முயற்சித்துள்ளமை தொடர்பிலான தடயங்கள் கிடைத்துள்ளன.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபரை கைது செய்வதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்
0 Comments