Ticker

6/recent/ticker-posts

Video - உயிரிழந்த கடற்படை வீரர் குறித்து வௌியான தகவல்!


வடகடலில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இந்த குழு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மயிலடி மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

குறித்த இந்திய மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கையின் போது கடற்படை அதிகாரி ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

கடற்படையின் சிறப்புப் படைப்பிரிவைச் சேர்ந்த 40 வயது மாலுமியே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியிலிருந்து இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகுகள் பலவற்றை அவதானித்ததை அடுத்து இன்று (25) அதிகாலை விசேட நடவடிக்கையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கடற்படை கட்டளையின் விரைவுத் தாக்குதல் படகுகளைப் பயன்படுத்தி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி கப்பலுடன் 10 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இந்திய மீனவர்கள் தமது கப்பலை வன்முறையாகவும் ஆபத்தான வகையிலும் கையாண்டதில் கடற்படையின் விசேட படைப்பிரிவைச் சேர்ந்த மாலுமி ஒருவர் பலத்த காயமடைந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.

இதன்போது, ​​கடற்படையின் விரைவுப் போர் படகின் ஒரு பகுதியும் குறிப்பிடத்தக்க அளவில் சேதமடைந்துள்ளதாக கடற்படையினர் அறிவித்தனர்.

பின்னர் படுகாயமடைந்த நபர் கரைக்கு கொண்டு வரப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

குருநாகல் இப்பாகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த கடற்படையின் விசேட படைப்பிரிவைச் சேர்ந்த 40 வயதுடைய மாலுமி ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

Post a Comment

0 Comments