Ticker

6/recent/ticker-posts

குழந்தைகள் பிடிவாதத்திற்கு யார் காரணம்?


குழந்தை பிடிவாதம் பிடித்தல் என்பது இயல்பான ஒரு விஷயம்தான். குறும்பு செய்தல், அடம் பிடித்தல் போன்றவை குழந்தைகளுக்கு உரிய குணங்கள். ஆனால் அந்த பிடிவாதம் பிடித்தல் என்பது குழந்தை வளர வளர குறைய வேண்டுமே தவிர.. குழந்தையுடன் சேர்ந்து அந்த பிடிவாத குணமும் வளர்வது நல்லதல்ல.


ஆரம்பத்தில் குழந்தைகள் பிடிவாதம் பிடிப்பது இயல்பு என்றாலும் தான் நினைத்தது நடக்கும் வரை அழுது கொண்டே இருப்பது, கத்தி அலறுவது, கையில் கிடைக்கும் பொருட்களை எல்லாம் தூக்கி எறிவது, கீழே விழுந்து உருண்டு புரண்டு அழுவது போன்றவை பிடிவாதத்தின் அடுத்த நிலைகளாகும். குழந்தைகளை இந்த நிலையிலேயே சரி செய்யாவிட்டால் அவர்கள் வளர்ந்த பிறகு சிறு சிறு தோல்விகளை கூட தாங்கிக் கொள்ள முடியாதவர்களாகவும், தான் நினைத்த காரியம் நடந்தே ஆக வேண்டும் என்ற தவறான மனப்பான்மை கொண்டவர்களாகவும் மாறி விடுகிறார்கள். சிறிதும் தன்னம்பிக்கை இன்றி தான் நினைத்ததை அடுத்தவர்கள் செய்து முடித்து தர வேண்டும் என்ற எண்ணமே இவர்களிடம் மேலோங்கி காணப்படும்.

குழந்தைகள் ஏதேனும் பொருட்களைக் கேட்டு அடம் பிடித்து நாம் வாங்கிக் கொடுக்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம் என்றால் அந்த சூழ்நிலையை குழந்தையிடம் எடுத்துரைக்க வேண்டும். இப்பொழுதே வேண்டும் என்று குழந்தை அடம் பிடித்தால் அடுத்த முறை என்றால் அடுத்த முறை தான் என்று குழந்தைகளுக்கு தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்.

குழந்தை ஏதேனும் பொருளுக்கு அடம் பிடிக்க தொடங்கினால் அது அடம்பிடித்து முடிக்கும் வரை யாரும் கண்டு கொள்ளாமல் அமைதியாக இருந்தாலே அந்த குழந்தை யாரும் கண்டு கொள்ளவில்லை என்று சிறிது நேரத்தில் தன்னாலே சமாதானம் ஆகிவிடும்.

குழந்தைகளுக்கு தேவை இல்லாத பொருட்களுக்கு இல்லை என்று சொல்லிப் பழகுங்கள் எது நினைத்தாலும் கிடைக்கும் என்ற மனப்பான்மையை இது மாற்றும்.

Post a Comment

0 Comments