Ticker

6/recent/ticker-posts

தொழிலுக்காக பெற்றோர் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு தந்தையின் துப்பாக்கியை எடுத்து தன்வாயில் சுட்டுக்கொண்டு உயிரிழந்த கம்பளை - உலப்பனை பிரதேச மாணவன்


தாயார் வேலைக்கு சென்றபின்னர் அறைக்குள் கதவைப் பூட்டிக் கொண்ட உயர்தரத்தில் படிக்கும் பாடசாலை மாணவன் ஒருவன் தன்னைத்தானே துப்பாக்கியால் வாயில் சுட்டு உயிரிழந்துள்ளதாக கம்பளை - எத்கால போலீசார் தெரிவிக்கின்றனர்.

கண்டி கிங்ஸ்வுட் கல்லூரியில் கணத பிரிவில் கல்வி கற்றுவரும் கம்பளை வீதி உலப்பனை பிரதேச ஊர் ஒன்றில் வசிக்கும் கே.எம்.பி.ஆர்.ஜி. குலசேகரன் என்ற பதினெட்டு வயது மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

பொலிஸாரின் கூற்றுப்படி, மறைத்து வைக்கப்பட்டிருந்த தனது தந்தைக்கு சொந்தமான துப்பாக்கியை மாணவன் கண்டுபிடித்து தனது அறைக்கு எடுத்து சென்று நாற்காலியில் அமர்ந்து தன்னைத்தானே சுட்டுக் கொண்டுள்ளார்.

வேலைக்காக பெற்றோர் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு அவர் தனது சகோதரருடன் வீட்டில் தங்கி இருந்துள்ளார். காலை பத்து மணியளவில் இந்த மாணவனிடம் பேசுவதற்காக அவரின் அண்ணன் அறைக் கதவைத் திறந்தபோது அவர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.

இந்த மாணவன் சாதாரண தர பரீட்சையில் 8 A சித்திகளையும் B சித்தியையும் பெற்று சித்தியடைந்துள்ளார். மேலும் ஒரு வருடம் முன்னதாகவே உயர்தரத்துக்குத் தயாராகிவிட்டதால், தேர்வெழுத முடியாமல் போய்விடுமோ என்ற அச்சம் அவருக்கு இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த மாணவர் பெரும்பாலும் ஆன்லைன் பாடங்களைச் செய்துள்ளதோடு, கணினி மற்றும் மொபைல் போனை அடிக்கடி பயன்படுத்தியுள்ளார்.

அந்த மாணவர் வீடியோ கேம்களுக்கு அடிமையாகிவிட்டதாகவும், தேர்வை நினைத்து மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

கம்பளை பதில் நீதவான் நந்தனி காந்திலதா விசாரணைகளை மேற்கொண்டதுடன், பிரேத பரிசோதனை நேற்று பேராதனை போதனா வைத்தியசாலையில் நடைபெற்றது/

கம்பளை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அசங்க பண்டார குணதிலக்க உதவி பொலிஸ் அத்தியட்சகர் எச்.சாம் ஹேரத், பதில் நிலைய பொறுப்பதிகாரி வெலகெதர குற்றப் பிரிவு பிரதான பொலிஸ் பரிசோதகர் சம்பிக்க விமலரத்ன பொலிஸ் சார்ஜன் வருவன 2191 நிலந்த 21002 பந்துல ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டனர்

Post a Comment

0 Comments