Ticker

6/recent/ticker-posts

தமது ஆசனவாய் மற்றும் பயணப் பொதிகளில் மறைத்து 18 கோடி ரூபா பெறுமதியான தங்க ஜெல் உருண்டைகளை கொண்டுவந்த 6 பேர் கைது


கட்டுநாயக்க விமான நிலையத்தில் 18 கோடி ரூபா பெறுமதியான தங்க ஜெல் உருண்டைகளுடன் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள், துபாயில் இருந்து சென்னைக்கு வந்து அங்கிருந்து செவ்வாய்க்கிழமை (25) பிற்பகல் 01.20 மணியளவில் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் 6E-1175 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

விமான நிலைய சுங்க அதிகாரிகள் ஸ்கேன் சோதனைக்கு அனுப்பியதை அடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமது உடல்களின் ஆசனவாய் மற்றும் பயணப் பொதிகளில் மறைத்து வைத்துக்கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த 06 இலங்கையர்கள் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.



கைதானவர்கள், கல்முனை, மூதூர், கொழும்பு-10, கல்கெடிஹேன், மினுவாங்கொடை ஆகிய இடங்களில் வசிப்பவர்களும், அடிக்கடி விமானத்தில் பயணிக்கும் 30 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட ஆறு பேர் உள்ளனர்.

அவர்களில் 4 பேர் மலக்குடலில் தங்க ஜெல் பந்துகளை மறைத்து வைத்திருந்ததாகவும், மேலும் இருவர் 22 தங்க ஜெல் பந்துகளில் 08 கிலோ 632 கிராம் எடையுள்ள தங்க ஜெல் பந்துகளை மறைத்து வைத்திருந்ததாகவும் விமான நிலைய சுங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.




கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பணிப்பாளர் திரு.இந்திக்க சில்வா உள்ளிட்ட சுங்க அதிகாரிகள் குழுவினால் கைது மற்றும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், புதன்கிழமை (26) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Post a Comment

0 Comments