Ticker

6/recent/ticker-posts

மின் இணைப்பைப் பெற முற்பட்ட 17 வயது பாடசாலை மாணவி, மின்சாரம் தாக்கி உயிரிழப்பு


தையல் இயந்திரத்தின் மோட்டாருடன் இணைக்கப்பட்ட வயரின் செருகியை அறுத்து, பாதுகாப்பற்ற முறையில் மின் இணைப்பைப் பெற முற்பட்ட 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிலியந்தலை தும்போவில, துவாவத்த வீதி, 5வது லேன், பிரதேசத்தை சேர்ந்த , நுகேகொட மஹாமாயா பெண்கள் கல்லூரியில் கல்வி கற்கும் நிஷானி பியூமிகா வென்ரோவன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவியின் பிரேத பரிசோதனை களுபோவில போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படவுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர் .

Post a Comment

0 Comments