ஆப்கானிஸ்தானில் பெய்துவரும் கடும் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி 68இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 10இற்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர்.
ஆப்கானின் கோர், பாக்லான் மற்றும் பல்வேறு மாகாணங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
கோர் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதனால், பல இடங்களில் வெள்ளப்பெருக்கெடுத்துள்ளது
வெள்ளத்தில் சிக்கி 2,500 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த வாரம் பாக்லான் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 300இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.
இந்நிலையில் கோர் மாகாணத்தில் மழை தீவிரமடைந்துள்ளது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் முதல் கட்ட அறிக்கையின்படி சுமார் 68இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தலிபான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 10இற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
0 Comments