Ticker

6/recent/ticker-posts

ஈரானின் இடைக்கால ஜனாதிபதி யார்?


ஈரானின் ஜனாதிபதியாகப் பணியாற்றிய இப்ராஹிம் ரைசி நேற்று (19) அந்நாட்டின் மலைப் பகுதியில் இடம்பெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார் என்பது இன்று (20) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டின் அடுத்த ஜனாதிபதி குறித்தும் பேசப்பட்டு வருகிறது.

நாட்டின் அரசியலமைப்பின் படி, ஒரு இடைக்கால ஜனாதிபதி நியமிக்கப்படுகிறார். தற்போது நாட்டின் “முதல் துணை ஜனாதிபதியாக” பணிபுரிபவர் அந்த பதவிக்கு நியமிக்கப்படுவார்.

அந்த பதவியை தற்போது 68 வயதான முகமது மொக்பர் வகிக்கிறார். நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக மொக்பர் நியமிக்கப்படுவார் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அவரும் அங்கம் வகிக்கும் மூவர் குழு, 50 நாட்களுக்குள் புதிய ஜனாதிபதித் தேர்தலைத் திட்டமிட வேண்டும்.
சபையின் மற்ற இரண்டு உறுப்பினர்கள் பாராளுமன்ற சபாநாயகர் மற்றும் தலைமை நீதிபதி ஆவர்.

Post a Comment

0 Comments