Ticker

6/recent/ticker-posts

சிங்கப்பூரில் ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்தது


சிங்கப்பூரை மிக நீண்ட காலம் ஆட்சி செய்த பிரதமர் “Lee Hsien Loong” தனது பதவியை இராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.

அதேநேரம், நாட்டின் அரசியலில் ஒரு அத்தியாயம் முடிவுக்கு வரும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

சிங்கப்பூரை இருபது ஆண்டுகள் ஆட்சி செய்த லீ இன்று இரவு தனது அதிகாரங்களை அந்நாட்டின் துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங்கிடம் ஒப்படைப்பார்.

சிங்கப்பூர் 1965 இல் சுதந்திர நாடானது. அதன்பிறகு 59 ஆண்டுகளில் மூன்று பிரதமர்கள் மட்டுமே நாட்டை ஆட்சி செய்துள்ளனர்.

மூவரும் மக்கள் செயல் கட்சியை சேர்ந்தவர்கள்.

நாட்டின் முதல் பிரதமர் லீ குவான் யூ. தற்போதைய பிரதமரின் தந்தையான இவர், சிங்கப்பூரை 25 ஆண்டுகள் ஆட்சி செய்து, நவீன சிங்கப்பூரின் நிறுவனராகக் கருதப்படுகிறார்.

இந்த அதிகாரப் பரிமாற்றத்தின் மூலம் நாட்டின் அரசியல் தலைமைத்துவம் “லீ குடும்பத்தின்” நிழலில் இருந்து விடுபட்டுள்ளது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

ஆனால் தற்போதைய பிரதமர் அந்நாட்டு அமைச்சரவையில் மூத்த அமைச்சராகப் பணியாற்றப் போகிறார்.

வார இறுதியில் பிரதமராக தனது கடைசி செய்தியாளர் சந்திப்பை நடத்திய லீ, சிங்கப்பூரர்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.

“நான் எல்லோரையும் விட வேகமாக ஓட முயற்சிக்கவில்லை. அனைவரையும் என்னுடன் ஓட வைக்க முயற்சித்தேன்.. கொஞ்சம் வெற்றி பெற்றோம் என்று நினைக்கிறேன்…”

Post a Comment

0 Comments