ஈராக்கில் (Iraq) உள்ள ஈரானுக்கு (Iran) ஆதரவான கல்சோ இராணுவத் தளம் மீது மிகப்பெரிய குண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் அணிதிரட்டல் படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த தாக்குதலுக்கு பின்னால் யார் உள்ளனர் என ஈராக்கின் பாதுகாப்பு வட்டாரங்கள் இன்னும் உறுதியான தகவல் எதையும் வெளியிடவில்லை.

அத்துடன், குண்டுவெடிப்புக்கு முன்னதாக இப்பகுதியில் உள்ள வான்வெளியில் ட்ரோன்கள் அல்லது போர் விமானங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரிய பதிலடி

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் மிகவும் எச்சரிக்கையாக உள்ளன.


அதேவேளை, ஈரானிய நலன்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி வழங்கப்படும் என ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.