Ticker

6/recent/ticker-posts

ஐந்து வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் சிறையினுள் டியூப் லைட்டை கடித்து விழுங்கியதை அடுத்து கண்டி வைத்தியசாலையில் அனுமதி.


ஐந்து வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, தும்பர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் ட்யூப் லைட்டை விழுங்கியதன் காரணமாக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பல திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த கம்பளை பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடைய ஒருவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு 2022 ஆம் ஆண்டு அவருக்கு ஐந்து வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வயிற்றில் ஏற்பட்ட வீக்கம் மற்றும் வலி காரணமாக குறித்த கைதி கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது வயிற்றின் ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தன்னிடம் கைத்தொலைபேசி இருக்கிறதா எனக் கேட்டு இரண்டு சிறை அதிகாரிகள் தன்னை அறைக்கு அழைத்துச் சென்று தாக்கியதாகவும். அதனையடுத்தே ​அந்த அறையில் இருந்த டியூப் லைட்டை கழற்றி கடித்து விழுங்கியதாகவும் பொலிஸாரிடம் கைதி தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் பலகொல்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments