உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விவாதம் நாளை (24) முதல் மூன்று நாட்களுக்கு நடத்துவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது.

நாளை (24) காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை, அபின் மற்றும் அபாயகரமான போதைப் பொருள்கள் சட்டத்தின் கீழ் உள்ள உத்தரவுகள் மீது விவாதம் நடத்தப்பட்டு, அதன் பிறகு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விவாதம் ஆரம்பமாகவுள்ளது.

இந்த விவாதத்திற்கான பிரேரணை எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்டதுடன், முன்னதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக 13 கோடி ரூபா செலவில் 11 நாட்கள் பாராளுமன்ற விவாதம் நடத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.