உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சற்றுமுன்னர் ஆஜராகியுள்ளார்.

அண்மையில் கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், கடந்த 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலை நடத்தியது யார் என்பது தனக்கு தெரியும் எனவும், அது தொடர்பில் நீதித்துறைக்கு தகவல்களை வெளியிட தயார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பிலேயே இந்த வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.