Ticker

6/recent/ticker-posts

குறைக்கப்பட்ட மின் கட்டணத்தை எவ்வாறு கணக்கிடுவது?

 


பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் மின் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நேற்று (04) அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, மொத்த கட்டணத்தில் 21.9 சதவீதம் குறைக்கப்படும்.

30க்கும் குறைந்த மின்சார அலகுகளுக்கான கட்டணம் 33 சதவீதத்தினால் குறைக்கப்படவுள்ளது.

அதேநேரம், 31 முதல் 60 வரையான அலகுகளுக்கான கட்டணம் 28 சதவீதத்தாலும் குறைக்கப்படவுள்ளது.

அத்துடன், 61 முதல் 90 வரையான அலகுகளுக்கான கட்டணம் 30 சதவீதத்தினாலும் குறைக்கப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

90 முதல் 180 வரையான அலகுகளுக்கு 24 சதவீதமும், 180க்கு மேற்பட்ட அலகுகளுக்கான கட்டணம் 18 சதவீதத்தினாலும் குறைக்கப்படவுள்ளது.

இதேவேளை, சமய வழிபாட்டு தலங்களுக்கான கட்டணம் 33 சதவீதத்தினாலும், விருந்தகங்கள் மற்றும் உணவகங்களுக்கான கட்டணம் 18 சதவீதத்தினாலும் குறைக்கப்படவுள்ளது.

அரச நிறுவனங்களுக்கான கட்டணம் 22 சதவீதத்தினாலும், பொதுவான கட்டணம் 23 சதவீத்தினாலும் குறைக்கப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த தரவுகளை உள்ளிடுவதன் மூலம் அடுத்த மாதத்திற்கான மின் கட்டணத்தை கணக்கிடும் முறையை numbers.lk அறிமுகப்படுத்தியுள்ளது.

பொருந்தக்கூடிய கட்டணங்களை https://tools.numbers.lk/eleccal என்ற இணையதளத்திற்குச் சென்று கண்காணிக்கலாம்.




Post a Comment

0 Comments