மூளைச்சாவடைந்து உயிரிழந்த மாணவி ஒருவர் திங்கட்கிழமை (04) வெளியாகிய உயர்தர பரீட்சை பெறுபேற்றில் மூன்று பாடங்களிலும் 3 A பெறுபேறுகளைப் பெற்றுள்ளார்.
குருணாகல் மலியதேவ மகளிர் கல்லூரியின் உயர்தரப் பாடசாலை மாணவியான 19 வயதுடைய விஹாகன ஆரியசிங்க என்ற மாணவிக்கே இந்தப்பெறுபேறு கிடைத்துள்ளது.
வணிகப் பிரிவில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் மூன்று A சித்திகளைப் பெற்றுக் கொண்ட இவர் திடீர் தலைவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், இவரது இதயம், கல்லீரல், கண், சிறுநீரகம் மற்றும் நுரையீரல் ஆகியன ஏழு நோயாளிகளுக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டு அவர்கள் உயிர் வாழ்வதாக வைத்தியசதலை வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமும் செய்திகளுடன் இணைந்து கொள்வதற்கு👉
0 Comments