Ticker

6/recent/ticker-posts

அடுத்த மாதம் முதல் வீட்டிலிருந்தவாறே பாஸ்போட்டை பெற்றுக்கொள்ள முடியும்.


எதிர்வரும் ஜூன் மாதம் முதல், பொதுமக்கள் தங்களுக்கான கடவுச் சீட்டைப் பெற்றுக்கொள்ள, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு பிரவேசிக்க வேண்டிய அவசியம் இல்லை என அதன் கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பத்தை, இணையத்தளம் ஊடாக அனுப்பிவைக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு அமைவான கட்டணம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின், வங்கிக் கணக்கில் வைப்பிலிடலாம்.

அத்துடன், பிரதேச செயலக காரியாலயங்களில், கைவிரல் அடையாளங்களைப் பதிவுசெய்ய முடியும் என்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, மூன்று நாட்களின் பின்னர், பதிவுத் தபால் மூலம், விண்ணப்பதாரரின் வீட்டுக்கே, கடவுச்சீட்டு அனுப்பிவைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்

தினமும் செய்திகளுடன் இணைந்து கொள்வதற்கு👉 

https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6



Post a Comment

0 Comments