காலி பிரதேசத்தில் இன்று (12) பிற்பகல் பெய்த கடும் மழை காரணமாக காலி நகரின் பல வீதிகள் உட்பட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

காலி - பத்தேகம பிரதான வீதி, காலி வக்வெல்ல பிரதான வீதி மற்றும் பல பக்க வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக காலி பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.


காலி – பத்தேகம பிரதான வீதி, தலப்பிட்டிய, தங்கெதர மற்றும் பத்தேகம ஆகிய பகுதிகளும் நீரில் மூழ்கியதுடன், காலி – வக்வெல்ல வீதியானது காலி நகரத்திலிருந்து சங்கமித்த வித்தியாலயத்திற்கு அருகாமையில் நீரில் மூழ்கியுள்ளது.

இதனால், இவ்வீதிகளில் போக்குவரத்து தடைபட்டுள்ளதுடன், நீர் வெளியேறும் வாய்க்கால் மற்றும் கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படாததால், வெள்ளம் சூழ்ந்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.