இன்று (29) நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படவுள்ளதாக எரிசக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

அதன்படி, ஒரு லீற்றர் 92 ஒக்டேன் பெற்றோலின் விலை 60 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாகவும், அதன் புதிய விலை 340 ரூபா எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு லீற்றரின் 95 ஒக்டேன் பெற்றோலின் விலை 135 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாகவும் அதன் புதிய விலை 375 ரூபாவெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


ஒரு லீற்றர் ஓட்டோ டீசலின் விலை 80 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாகவும் அதன் புதிய விலை 325 ரூபாவெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு லீற்றர் சுப்பர் டீசலின் விலை 45 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாகவும் அதன் புதிய விலை 465 ரூபாவெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு லீற்றர் மண்ணெண்ணெய்யின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாகவும் அதன் புதிய விலை 295 ரூபாவெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.