Ticker

6/recent/ticker-posts

வாட்சப்பில் இனிமேல் நீங்களே உங்களுக்கு மெசேஜ் அனுப்பிக் கொள்ளலாம்.


வாட்சப் ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு புதிய அப்டேட் அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

அந்த வகையில், ஒரு புதிய அப்டேட் ஒன்றை வாட்சப் வழங்க உள்ளது.

Telegram நிறுவனம் ஏற்கனவே வழங்கிவரும் சேவையை போல, இப்போது வாட்ஸ் அப்பிலும் ஒரு வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

கடையில் வாங்க செல்லும் பொருட்கள் உட்பட எல்லாவற்றையும் தங்கள் நினைவில் சேமித்து வைத்துக்கொண்டே இருக்க முடியாது.

அவசரத்தில் ஒரு எண்ணை சேமிக்க வேண்டும் என்றாலும் பேப்பர், பேனா கையில் இருக்காது. இந்த மாதிரி சூழலில் யாராவது ஒருவருக்கு அல்லது நமது மற்றொரு வாட்ஸப் நம்பருக்கு செய்தியாக அனுப்பி விட்டு பின்னர் அதை குறித்துக் கொள்வோம்.

ஒரு சிலர், சில நெருங்கிய நபர்களை இது போன்ற செய்திகள் அனுபவதற்காகவே வைத்திருப்பர்.

அதற்கு பதிலாக இப்போது தனக்கென்று தனி ஒரு சாட் வைத்துக்கொண்டு அதற்கு அனுப்பி சேமித்துவைத்துக் கொள்ளவே இந்த புதிய அம்சம்.

டெலிக்கிராமில் saved மெசேஜ் என்ற தலைப்புடன் அமையும் சாட்டில் தனக்கு தானே செய்தி அனுப்பிக்கொள்ளலாம்.

அது போல இப்போது வாட்ஸ் அப்பில் பயனருடைய எண் ‘me’ என்று வரும். அதில் அவர் தனது குறிப்புகளை அனுப்பி சேமித்துக் கொள்ளலாம்.

இது பயனர்களுக்கு உதவியாக இருக்கும்.

ஏதேனும் லிங்குகளை சேமிக்கவும் இதை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்த அப்டேட்டின் விவரங்கள் WABetainfo வழியாக வெளிவந்துள்ளன.

வாட்சப்பின் Beta android version 2.22.24.2 ஆனது இந்த புதிய மெசேஜ் அம்சத்தைக் கொண்டு வெளியிடப்படும் என்று செய்திக் குறிப்பு குறிப்பிடுகிறது.

இந்த அம்சம் தற்போதைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பீட்டா சோதனையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.

இதில் ஏற்படும் சோதனை பிழைகள் சரி செய்யப்பட்டவுடன், Whatsapp அதை வரும் வாரங்களில் அனைவருக்கும் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன்அறிந்துகொண்டு எங்களுக்கு ஆதரவு தாருங்கள்🙏👍

https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6

Post a Comment

0 Comments