Ticker

6/recent/ticker-posts

எனக்கு இலங்கையில் தஞ்சம் தாருங்கள்.. நித்தியானந்தா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் எழுதினார்.

 


கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி இருப்பதாக தெரிவித்து வந்த

 நித்தியானந்தா தன்னுடைய உடல்நிலை சரியில்லாததால் இலங்கையில் தனக்கு தஞ்சம் கொடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் எழுதியிருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரவிக்கின்றன.


சர்ச்சைகளுக்கு பெயர்போன சாமியார் நித்தியானந்தா, தனது பக்தர்களிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும், பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபட்டதாகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலிருந்தே மாயமான நித்தியானந்தா, கொரோனா ஊரடங்கின்போது யூடியூபில் தோன்றினார்.

கைலாசா என்ற நாட்டை உருவாக்கி இருப்பதாக கூறி கொடி, சின்னம், அமைச்சகங்களை அறிவித்த நித்தியானந்தா, பாஸ்போர்ட் பெறவும், குடியுரிமைக்கு விண்ணப்பிக்கவும் அழைப்பு விடுத்தார். இந்தியாவில் தேடப்படும் நித்தியானந்தா எப்படி தப்பினார்? கைலாசா எங்கிருக்கிறது? ஒருவேளை அவர் இந்தியாவில் இருந்துகொண்டே பேசுகிறாரா? என்றெல்லாம் சந்தேகங்கள் எழத் தொடங்கின

இந்த நிலையில், இலங்கையில் தனக்கு தஞ்சம் கொடுக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியது தெரியவந்திருக்கிறது. அதில், “ஸ்ரீ நித்தியானந்தா பரமசிவனுக்கு உடனடி மருத்துவ உதவி தேவைப்படுகிறது. கைலாசாவில் நித்தியானந்தாவில் போதிய சிகிச்சை அளிக்க முடியவில்லை. அவருக்கு ஏற்பட்டு உள்ள உடல்நிலை குறைபாட்டை சரி செய்ய இலங்கையில் தஞ்சம் அளிக்க வேண்டும்.” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Post a Comment

0 Comments