சிகரெட் பிடிக்கிற பழக்கமே இல்லாத ஒரு ஊருக்கு, சிகரெட் வியாபாரி ஒருத்தர் வந்தார். வியாபாரம் பண்ணிப் பார்த்தார். யாரும் அந்த ஊர்ல வாங்குற வழியைக் காணோம்.
இவரு என்ன பண்ணலாம்ன்னு யோசிச்சார். உடனே, சிகரெட்டோட பெருமைகளை பத்தி பிரச்சாரம் பண்ண ஆரம்பிச்சார். எப்படி தெரியுமா?
* புகைப் பிடிக்கிறவன் எவனையும் நாய் கடிக்கிறதில்லை !
*புகைப் பிடிக்கிறவனுக்கு ஊனமற்ற குழந்தை பிறக்கிறதில்லே!
* புகைப் பிடிப்பவன் வீட்டுக்கு திருடன் வரமாட்டான் !
*புகைப் பிடிக்கிறவனை முதுமை நெருங்காது!
அப்படின்னு சொல்லி விளம்பரம் பண்ண ஆரம்பிச்சார்.
ஜனங்களலாம் பார்த்தாங்க.... இதுல நிறைய சௌகரியம் இருக்கும் போலன்னு நினைச்சாங்க.
உடனே, சிகரெட் வாங்க ஆரம்பிச்சாங்க வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. ஒரு வருஷம் ஆச்சு .....
சிகரெட்டின் மகிமை பற்றி அந்த வியாபாரி சொன்னது பொய்யின்னு அனுபவத்துல புரிஞ்சுகிட்டார் ஒருத்தர் .உடனே வியாபாரியைத் தேடிட்டு போனார்.
"என்னையா நீ.... இந்த ஊர் ஜனங்களை பொய் சொல்லி ஏமாத்திப்புட்டியே....'ன்னு சண்டை போட்டார் .
ஆனால் அந்த ஆள் கொஞ்சம் கூட அசரல."நான் சொன்னது எதுவும் பொய் இல்லை.....ன்னு" சாதித்தார்.
இவரு விடலே.....
"அது எப்படி ? புகைப் பிடிக்கிறவனை நாய் கடிக்காதுன்னு சொன்னியே அது பொய் தானே...." என்றார்.
இதற்கு அந்த வியாபாரி விளக்கம் கொடுத்தார்.
"அப்படி இல்லைங்க புகைப் பிடிக்கிறவன் உடம்புல பலம் இருக்காது. தள்ளாடி தள்ளாடி தான் நடப்பான். அதனால, எப்பவும் கையில ஒரு ஊன்றுகோல் வச்சிருப்பான். கையில குச்சியோட இருக்கிறவனை பார்த்தால் நாய் நெருங்காது.அதுதான் அப்படி சொன்னேன் ....."என்றார்.
"ஊனமுற்ற குழந்தை பிறக்காதுன்னு சொன்னீயே அது எப்படி?ன்னு கேட்டார், இவர்.
"உண்மையில் அவனுக்கு எந்த குழந்தையும் பிறக்காது. அதனால, ஊனமுற்ற குழந்தையும் பிறக்காது தானே."
"புகைபிடிக்கிறவன் வீட்டுக்கு திருடன் வரமாட்டான் சொன்னியே...." என்றார்.
"ஆமாம், புகை பிடிப்பவன் ராத்திரிபூரா இருமிக்கிட்டே இருப்பான். அதனால், ஆள் முழிச்சுக்கிட்டு இருக்கான்னு நினைச்சு திருடன் வரமாட்டான்...." என்றார், இவர்.
"எல்லாம் சரி, புகைபிடிக்கிறன் முதுமை அடையறது இல்லையான்னு சொன்னியே, அது எப்படி சாத்தியம்?" என்று கேட்டார் .
"முதுமை வருவதற்கு முன்னாடி அவன் செத்துப் போயிடுவான் சார். அப்புறம் எப்படி அவனை முதுமை நெருங்கும்....ன்னு கேட்டார்,இவர்.
"நியாயம் தான் ... ன்னு" என்று சொல்லிவிட்டு இவர் திரும்பி வந்துட்டார் .
இந்த கதையிலிருந்து வியாபார தந்திரம்னா என்னங்கிறதையும், அரசியல் கட்சிகளின் வாக்குறிதி என்ன என்பதையும், புகைப்பழக்கம் எவ்வளவு கெடுதல்ங்கறதையும் புரிஞ்சிக்கலாம்....!!!!
எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன் அறிந்துகொண்டுஎங்களுக்கு ஆதரவு தாருங்கள்🙏👍
https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6
0 Comments