நேற்றைய தினத்தில் கேகாலையில் நடைபெற்ற விபத்தில் உயிரிழந்த நாங்கல்லயை சேர்ந்த


ரஹ்மி,

மனாஸிக்கான்,

மிப்ளால் மூவரின் ஜனாஸாக்களை பார்வையிடவும் ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்ளவும்  வரலாறு காணாத  மக்கள் திரள் கூட்டம் வருகை தந்ததை காணக்கூடியதாக இருந்தது.


பள்ளிவாசலில் மூன்று பேரினதும் ஜனாஸாக்கள் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்ட பின்னர் மூவருக்குமாக ஒரே நேரத்தில் ஜனாஸா தொழுகையும் நடாத்தப்பட்ட தோடு அடுத்தடுத்த கப்றுகள் தோண்டப்பட்டு நல்லடக்கமும் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 


முழு ஊரையுமே சோகத்தில் ஆழ்த்திய மேற்படி மூவரின் சகல பாவங்களையும் வல்லவன் அல்லாஹ் மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌவ்ஸ் எனும் உயர்ந்த சுவனத்தை வழங்குவானாகவும் ஆமீன்.


வரலாற்றில் இப்படி ஒரு சோகம் நாங்கள்ளை கிராமத்தில் ஏற்பட்டதில்லை


மூன்று வாலிபர்களின் ஜனாஸா செய்தி

எமது ஊரையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


மூன்று வாலிபர்களின் குடும்ப நிலைமை..


 01. *மனாசிக்கான்*

 என்னும் வாலிபர் திருமணம் முடித்து தனது மனைவியுடன் சிறிது காலமே வாழ்ந்தார் தனக்கென்று ஒரு குழந்தையை பெற்றெடுத்து அதனுடன் கொஞ்சி விளையாட ஆசைப்பட்டிருந்தார் அவரது மனைவியோ ஒன்பது மாதம் கர்ப்பிணித்தாய்


அவரது தாய்க்கு ஒரே ஒரு பிள்ளை அவர்தான்

 தகப்பனும் பல வருடங்களுக்கு முன் மரணித்தார் 

குடும்பத்தில் தற்பொழுது அவரது தாயும்  மனைவியும் மாத்திரம் தான் இது ஒரு சோக நிகழ்வு.


மற்ற வாலிபர்


02. *மிப்ளால்* 

இவரது தகப்பனுக்கு இரண்டு குழந்தைகள் 

ஒன்று பெண் குழந்தை மற்றது ஒரே ஆண் மகனாகிய மிப்ளால் தான்


திருமணம் முடித்து மனைவியுடன் சந்தோசமாக வாழ்ந்து வந்தார் பல தடவை மனைவி கர்ப்பம் ஆகி குழந்தை கிடைக்காமல் குழந்தைக்காக ஆசையோடு கனவுகள் கண்ட நிலைமையில் வாழ்ந்து வந்தார் தற்பொழுது அவரது குடும்ப நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.


மற்றவர்


03. *ரஹ்மி* 

இவரது குடும்பத்தில் இரண்டு ஆண்கள் மாத்திரம்தான்

 இரண்டாமவர் இவர் தான். திருமணம் முடித்து முதல் குழந்தை பிறந்து 20 நாட்கள் தான் ஆகின்றது இவரது குடும்ப நிலைமையும் மிகவும் சோகமான நிலைமையில் உள்ளது.


இது நமது வாலிபர்களுக்கு மிகப்பெரும் ஒரு படிப்பினைக்குரிய நிகழ்வாக இருக்கின்றது

எனவே அவர்களின் குடும்பங்களுக்கு நல்ல ஆறுதலை அல்லாஹ் வழங்குவானாக மேலும் அவர்களுக்கு ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவர்க்கத்தை அல்லாஹ் வழங்கி வைப்பானாக..


ஒரு முஸ்லிமை பொறுத்தவரை அவன் மரணித்ததன் பின்னர் தான் அவனது நிரந்தர வாழக்கை ஆரம்பமாகிறது. இந்த இளைஞர்கள் அவர்களின் நிரந்தர வாழக்கையை வாழ ஆரம்பித்துவிட்டார்கள். நாம் கட்டாயம் அவர்களுக்காக பிரார்த்திப்போம்.


இவர்களின் இத்திடீர் மரணம் நமக்கு சொல்ல வரும் செய்தி என்ன என்பதனை நாம் சற்று நேரம் ஒதுக்கி சிந்திக்க முயற்சிக்க வேண்டும். 


இதனை வெறுமனே பார்த்துவிட்டு வாசித்துவிட்டு கடந்து செல்வதற்கான வெறுமனே ஒரு செய்தி மட்டுமல்ல.


மரணத்துக்கு நேரம் கிடையாது வயது கிடையாது நாம் எப்போதும் நீண்ட கால வாழ வந்தவர்களைப் போலவே மனதில் கற்பனை செய்து வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.


அது எவ்வளவு தவறான கற்பனை என்பதனை இந்த ஜனாஸாக்கள் நமக்கு சொல்லித் தருகின்றன.


வெறும் கேலிக்கைகளிலும், கூத்துகளிலும், அற்ப இன்பங்களிலும் மூழ்காமல் நாம் வாழ வந்த வாழ்க்கையின் நோக்கத்தை ஒரு முறை திரும்பிப் பார்ப்போம். 


இவ்வாறான அதிர்ச்சியான செய்திகள் மூலம் இறைவன் ஞாபமூட்டுவது

அடுத்த கனமே உனக்கும் மரணம் நேரலாம்

எந்த நேரமும் தயாராக இரு....


உன் மரணத்தின் பின்னரான நிரந்தர வாழ்வு இன்பமானதா துன்பகரமானதா என்பதனை தீர்மானிக்கப் போது இந்த நிரந்தரமற்ற நிச்சயமற்ற அற்ப உலக வாழ்க்கை தான்....


படங்கள் மற்றும் வீடியோ நாங்கள்ளை ஜும்மா பள்ளிவாசலில் ஜனாஸாக்கள் பார்வைக்காக வைக்கப்பட்ட நிலையையும் மக்கள் கூட்டம் ஜனாஸாக்களை பார்வையிட திரள் திரளாக காட்சியளிப்பதையும் பள்ளிவாசல் வளாகத்தில் மக்கள் குழுமியுள்ள காட்சியையும் அடுத்தடுத்த கப்றுகள் வரிசையாக தோண்டப்பட்டு நல்லடக்கத்துக்கு தயாராக வைத்திருப்பதையும் படங்களில் காணலாம்.

அல்லாஹ்வும்மஹ்பிர் லஹும் வர்ஹம்ஹும்.

எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன்அறிந்துகொள்ளுங்கள்

https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6