பேருவளை – மாகல்கந்த கடலில் நீராடியபோது, நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூவரில் இருவர் மரணித்தனர்.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த, 18 மற்றும் 19 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மற்றுமொரு நபர் சிகிச்சைப்பெற்று வருகின்றார்.

இன்று மதியம், மேலும் சிலருடன் குறித்த இளைஞர்கள் மாகல்கந்த கடலில் நீராடச் சென்றபோது இந்த அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளனர்.