கண்டி, மெனிகின்னவில் வீடொன்றில் புதையல் தோண்டிய ஐவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
நேற்று (28) மெனிக்கின்ன பொலிஸ் பிரிவில் இலக்கம் 09/05, செத்சிறி பிளேஸ், மெனிக்கின்னவில் அமைந்துள்ள வீடொன்றில் புதையல் தோண்டிய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் 32, 36, 37, 41 வயதுடைய மெனிக்கின்ன, ஜா அல, ஹந்தகனாவ, கெங்கல்ல ஆகிய இடங்களில் வசிப்பவர்கள் என தெரியவந்துள்ளது.
புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மெனிக்கின்ன பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
0 Comments