Ticker

6/recent/ticker-posts

மஹிந்த, பசில் ஆகியோருக்கான வெளிநாட்டு பயணத்தடை மீண்டும் நீடிப்பு...

 


முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.


இவர்களுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை ஓகஸ்ட் 04ஆம் திகதி வரை நீட்டித்து இலங்கை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


ஜூலை 15 ஆம் திகதி முதன்முதலில் இவர்களுக்கு நீதிமன்றம் பயணத் தடையை விதித்தது.


இவர்களுக்கு எதிராக டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா மற்றும் மூன்று பேர் தாக்கல் செய்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதை அடுத்து பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments