Ticker

6/recent/ticker-posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் சிறையில் உள்ளவா்களது பெற்றோா்கள் உறவினர்கள் ஊடக அறிக்கை.

 


அஷ்ரப் ஏ சமத்)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களின் வழக்கு விசாரணைகள் நிறைவடையும் முன்னர்/ பெரும்பாலானவர்களுக்கு இன்னும் குற்றப் பத்திரிகையே கையளிக்கப்படாjத நிலையில் அவர்களை பயங்கரவாதிகளாக அறிவித்து அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது

சந்தேகத்திடமான கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள குடும்ப உறவினா்கள் இணைந்து முஸ்லிம் சிறைக்கைதிகள் நலன்புரி அமைப்பு ஒன்று உறுவாக்கப்பட்டுள்ளதாக இவ் அமைப்பின் தேசிய அமைப்பாளா் அஷ்ரப் அலி குறிப்பிட்டுள்ளாா்.

இவா்கள் கடந்த 21ஆம் திகதி காத்தாண்குடியிலும் . 24 கொழும்பிலும் ஒன்று கூடி ஊடகங்களும் சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம்களுக்கு நீதி கிடைப்பதற்காக ஊடகங்களுக்கும் ஜனாதிபதி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தெளிவு படுத்தி வருகின்றதாக தெரிவித்தாா்.

உயிர்த்த ஞயிறு தாக்குதல் தொடா்பில் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள முஸ்லிம் அப்பாவிகள் குறித்து கலந்துறையடலில் தற்பொழுது அரசாஙகம் 162 முஸ்லிம்பளை பயங்கரவாதிகளாக அறிவுறுத்தியுள்ளது.. இவார்களில் நுாறு பேருக்கு எதிராக இதுவரை எந்தவொரு குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்யப்டவில்லை. அத்துடன் ஏனையோருக்கும் குற்றப்பத்திரிகை தொடா்பான வழக்குகள் இருந்தும் பலா் குற்றமற்றவா்களாக -நிரபாரதிகளாக விடுதலை செய்யப்பட்டுள்ளனா். இந் நிலையில் வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவா்களையும் குற்றப்பத்திரிகை கையளிக்கப்படவோ அல்லது வழக்கு விசாரணை நிறைவடையாத நிலையில் இருப்பவா்களும் கூட இந்த பயங்கரவாத பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளனா்.

உண்மையில் இது அடிப்படை மனித உரிமை மீறப்பட்ட செயலாகும். நீதித்துறையை தவறாக வழிநடத்தப்பட்டதாகவும் அப்பாவி முஸ்லிம்களது பெற்றோா்கள் உறவினா்கள் தெரிவிக்கின்றனா்.இப்போது வர்ததமானி அறிவித்தல் காரணமாக  பாதிப்புக்குள்ளாகி  இருக்கும்  உறவிணா்கள் இவ்விடயம் சம்பந்தமாக மனித உரிமை மீறல் மற்றும் ஜனாதிபதி, அரசியல்வாதிகள்,நீதி மற்றும் ஊடகங்களுக்கும் தெளிவுபடுத்தி வருகின்றனா்.




Post a Comment

0 Comments