காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாடசாலையொன்றில் 5ஆம் ஆண்டு மாணவன் ஒருவன் கடுமையாகத் தாக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், குறித்த மாணவனைத் தாக்கிய பாடசாலை அதிபர் தலைமறைவாகியுள்ளதாகவும் உடந்தையாக இருந்த ஆசிரியையொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுவருதாகவும் காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.ஏ.றஹீம் தெரிவித்தார்.
குறித்த தாக்குதலுக்கு உள்ளான மாணவன் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவன் பாடசாலையின் மேல் மாடிக்கு அழைத்துச் வெல்லப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட பெண் ஆசிரியை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் அதிபர் தொடர்ந்தும் தேடப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ரீ.எல்.ஜவ்பர்கான்
0 Comments