ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவின் ‘பீல்ட் மார்ஷல்’ பதவி தொடர்பில் தீர்மானம் எடுக்குமாறு அமைச்சர்கள் குழுவொன்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.


சரத் பொன்சேகா அண்மையில் வெளியிட்ட கருத்துகள் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இறுதிப் போராட்டத்துக்காக கொழும்புக்கு வருமாறும், உயிரைத் தியாகம் செய்யுமாறும் அல்லது போராட்டத்தில் வெற்றி பெறுமாறும் அவர் விடுத்துள்ள அறிக்கைளை சுட்டிக்காட்டி குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.