ஹெரோயின் மற்றும் போலி நாணயத்தாள்களை தம்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றையடுத்து திங்கட்கிழமை (15) நள்ளிரவு கல்முனை காஸிம் வீதியில் வைத்து சந்தேக நபர் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் கைதானார்.
இவ்வாறு கைதான நபர் 39 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் சந்தேக நபரிடமிருந்து 5, 000 போலி நோட்டுகள் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் 3 கிராம் 100 மில்லிகிராம் என்பன விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இச்சோதனை நடவடிக்கையின்போது விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை அதிகாரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சில்வெஸ்டர் விஜேசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.சி வேவிடவிதான ஆகியோரின் வழிகாட்டலில் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்க தலைமையிலான உப பொலிஸ் பரிசோதகர்களான எச்.ஜி.பி.கே நிசங்க மற்றும் பண்டார உள்ளிட்ட பொலிஸ் சார்ஜன்ட் பண்டார பொலிஸ் கன்ஸ்டபிள் பிரபாத் வாகன சாரதி ஜயரட்ண இந்நடவடிக்கையை முன்னெடுத்து சந்தேக நபரை கைது செய்தனர்.
நபர் சான்று பொருட்களுடன் கல்முனை பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினர் பாரப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன்அறிந்துகொள்ளுங்கள்
https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6
0 Comments