Ticker

6/recent/ticker-posts

ஜெய்லானி தேசிய பாடசாலையின் வரத்தகப் பிரிவு மாணவன் A.C.MUSFIQ தனது 18வது வயதில் இன்று காலமானார்.

 


பலாங்கொடை ஜெய்லானி தேசிய பாடசாலையின் வரத்தகப் பிரிவு மாணவன் A.C.MUSFIQ தனது 18வது வயதில்  இன்று காலமானார். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஹுன்....  

என்னுடைய காலத்தில் O/L பரீட்சைக்குத் தோற்றிய இம்மாணவன் கல்வியிலும் (5A, 2B, 2C), விளையாட்டிலும்

Football,  Elle,  Volleyball, Cricket (Hard Ball & Softball),  Athletic (L.J,  TJ,  200M) என அனைத்து வகையிலும் பிரகாசித்த ஒரு மிகச் சிறந்த மாணவன். 

#டெங்கு_காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு இன்று இரவு இறைவனின் அழைப்பை ஏற்றுக்கொண்டார். 


விளையாட்டின் நடுவிலும் கூட 5 நேர தொழுகையை தவறாமல் தொழுகின்ற ஒரு மாணவன் என விளை. பயிற்றுவிப்பாளர் Aashif M Mansoor தெரிவித்தார்.

 பாடசாலை மட்ட கடினபந்து CRICKET போட்டியில் #200_ஓட்டங்களை பெற்று சாதனை படைத்த இம்மாணவன்

இம்முறை வலயமட்ட CRICKET மற்றும்,  ELLE அணியின் தலைவராகவும்   வலயமட்ட முப்பாய்ச்சல்  போட்டியில்  மாகாண மட்ட போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்ட ஒரு வீரருமாவார். 

அமைதியான சுபாவமும் தன்னடக்கம் கொண்ட ஆசிரியர்களை எப்போதும் மதிக்ககூடிய  இம்மாணவனுடைய அனைத்து பாவங்களையும் இறைவா! மன்னிப்பாயாக!  நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக!   இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக  அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக!   இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக!  அதில்  இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!  

Risath Mohamed,

Former Principal,

R/ Jeilani NS,

Balangoda.

Post a Comment

0 Comments