தங்காலை, ஹேனகடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.


இந்த விபத்து நேற்று (31) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


தங்காலையிலிருந்து திஸ்ஸமஹாராம நோக்கிச் சென்ற கார் ஒன்று வீதியை விட்டு விலகி ஆலமரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது காரில் 05 பேர் பயணித்துள்ளதுடன் இருவர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 29 மற்றும் 35 வயதுடைய ரன்ன பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.

விபத்தில் காயமடைந்த கார் சாரதி மற்றும் ஏனைய இருவரும் தங்காலை வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன் அறிந்துகொள்ளுங்கள்

https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6