பிபில பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற சிறிய லொறி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்த 14 சிறுவர்கள் சிகிச்சைக்காக பிபில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிபில கனுல்வெல முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர் குழுவொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
விளையாட்டு நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக மாணவர்கள் குழு வெல்லஸ்ஸ தேசிய பாடசாலைக்கு இன்று காலை சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியாத காரணத்தினால், குறித்த மாணவர்கள் குழு இவ்வாறு லொறியில் பயணித்த போதே விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.I’m
0 Comments