நாரஹேன்பிட்டிய, திம்பிரிகஸ்யாய பிரதேசத்தில் தொலைபேசி கடை ஒன்றை உடைத்து ஒரு
கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான பொருட்கள் பலவற்றை திருடிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாரஹேன்பிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையின் போதே சந்தேகநபர் குருந்துவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் நடத்திய விசாரணையில் திருடப்பட்ட 14 மடிக்கணினிகள், 6 ஐ போட்கள், 3 ஸ்மார்ட் போன்கள், 3 ஹெட்செட்கள், ஒரு தொலைக்காட்சி பெட்டி, 3 ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர் வெலிகம பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடையவர் எனவும், கொழும்பில் 18 திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர் எனவும் தெரியவந்துள்ளது.
அவர் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன்அறிந்துகொள்ளுங்கள்
https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6
0 Comments