எட்ஜ்பாஸ்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயரை, இங்கிலாந்து பயிற்சியாளர் மெக்குல்லம் திட்டம் போட்டு தூங்கியது தெரியவந்தது.


முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் சுப்மான் கில் 17 ரன்களிலும், புஜாரா 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இளம் வீரர் விஹாரி 20 ரன்களுக்கு ஆட்டமிழக்க, நட்சத்திர வீரர் விராட் கோலி 19 ரன்கள் எடுத்திருந்த போது பாட்ஸ் வீசிய பந்தில் கிளின் போல்ட் ஆனார். இதனையடுத்து களத்துக்கு வந்த ஸ்ரேயாஸ் ஐயர், பாசிட்டிவாக விளையாடி பவுண்டரிகளை அடித்து இங்கிலாந்துக்கு நெருக்கடி தந்தார். இதனால் ஸ்ரேயாஸ் ஐயர் பெரிய ஸ்கோர் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், ஆண்டர்சன், அவருக்கு ஷாட் பால் போட்டு, அதனை ஸ்ரேயாஸ் ஐயர் Fine leg திசையில் அடிக்க முயன்ற போது விக்கெட் கீப்பரிடம் பிடிப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து வீரர்கள் அவரது விக்கெட்டை கொண்டாடினர். அப்போது ஜோ ரூட், டிரெசிங் ரூம்மில் அமர்ந்திருந்த பயிற்சியாளர் மெக்குல்லமை பார்த்து கையை உயர்த்த, அப்போது தான் தெரிந்தது, இந்த திட்டத்தை போட்டு கொடுத்ததே மெக்குல்லம் தான் என்று.. ஐபிஎல் தொடரின் போது கொல்கத்தா அணியில் பயிற்சியாளராக மெக்குல்லமும், கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரும் பணிபுரிந்தனர். அப்போது இருவருக்கும் இடையே நிறைய கருத்து வேறுபாடு வந்தது. அணியை தேர்வு செய்வதில் மெக்குல்லம் தலையிடுவதாக புகாரும் கூறப்பட்டது. இதனால் ஐபிஎல் தொடரிலிருந்த விலகிய மெக்குல்லம், இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக பணிபுரிந்தார். இதனால் ஸ்ரேயாஸ் ஐயரின் குறையை தெரிந்து கொண்டு, அதை வைத்து மெக்குல்லம் பழிவாங்கியது தெரியவந்துள்ளது.