மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் “மக்கள் போராட்ட பிரஜைகள்” என்ற புதிய அரசியல் கட்சியை பதிவு செய்வதற்கான ஆவணங்களை தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரிடம் இன்று (18) கையளித்துள்ளனர்.
தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்துக்குச் சென்று ஆவணங்களை ஒப்படைத்ததாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, போராட்டத்தை துஷ்பிரயோகம் செய்ய சில குழுவினர் முயற்சிப்பதாகவும், மக்களின் அபிலாஷைகளுக்காக தொடர்ந்தும் குரல் கொடுப்பதாகவும் மக்கள் போராட்ட பிரஜைகள் கட்சியின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சானக பண்டார தெரிவித்துள்ளார்.
எத்தகைய சவால்களுக்கு முகங்கொடுத்தாலும் நாட்டின் வளர்ச்சிக்காகவும் மக்களின் வளர்ச்சிக்காகவும் அனைத்தையும் செய்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments