சீனாவின் மக்கள் வங்கியில் வைப்புத் தொகையை முடக்கியமை தொடர்பாக நடந்த போராட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், பொது மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
சீனாவில் கிராமப்புற அடிப்படை வங்கிகளில் பொது மக்கள் சேமித்த கோடிக்கணக்கான ரூபாய் வைப்புத் தொகை பணத்தை வங்கி நிர்வாகம் முடக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் பணத்தை திருப்பித் தரக்கோரி வங்கியின் முன் ஏராளமானோர் திரண்டு போராட்டம் நடத்தியதாகவும், இதன் போது போராட்டத்தை கலைக்க பாதுகாப்பு வீரர்கள் முற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாதுகாப்பு வீரர்கள் மீது தண்ணீர் போத்தல்கள் உள்ளிட்டவற்றை எறிந்து மக்கள் எதிர்ப்பை தெரிவித்தனர் எனவும் இதனால் இரு தரப்பினர் இடையேயும் மோதல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments