Ticker

6/recent/ticker-posts

மாலைதீவிலும் கோட்டாக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!* வீடியோ


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாலைதீவில் வசிக்கும் இலங்கையர்கள் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

மாலத்தீவின் தலைநகரான மாலேயில் இலங்கையர்கள் போராட்டம் நடத்துவதை சமூக ஊடக பயனர் ஒருவர் பகிர்ந்துள்ள வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன 

இலங்கை தேசியக் கொடியை ஏந்தியவாறும், அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் காணப்படுகின்றனர்.

தற்போது மாலைதீவில் உள்ள உல்லாச விடுதியில் இருக்கும் கோட்டாபய ராஜபக்சவை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவி விலகலை இன்று அறிவிப்பதாக தெரிவித்திருந்த போதிலும், இன்று அதிகாலை தனது குடும்பத்தினருடன் மாலைதீவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


ராஜினாமாவை சமர்ப்பிக்காமல் நாட்டை விட்டு வெளியேறியதோடு, தற்போது பதில் ஜனாதிபதியாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நியமித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று மாலை மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் அல்லது துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கு செல்லவுள்ளதாக மாலைதீவு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


Post a Comment

0 Comments