பிரதமரின் அலரி மாளிகை வாசஸ்தலத்தில் இரண்டு தொலைக்காட்சிகளை திருடியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சந்தேக நபர் இன்று (28) கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கொழும்பு கோட்டை நீதவான் திரு திலின கமகே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
சந்தேக நபர் கடந்த 9ஆம் திகதி அரலியகஹ மாளிகைக்குள் நுழைந்து இரண்டு தொலைக்காட்சிப் பெட்டிகளைத் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதால் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான் சந்தேக நபரை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்றத்தைக் காட்டும் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதவான் பொலிஸாருக்கு அறிவித்தார்.
எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன் அறிந்துகொள்ளுங்கள்
0 Comments