உக்ரைனுக்கு அமெரிக்கா ஒதுக்கியுள்ள 40 பில்லியன் டொலர் மதிப்புடைய உதவித்திட்டத்தில் ஓர் அங்கமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உக்ரைனில் போர் ஆரம்பித்ததில் இருந்து 6.1 பில்லியன் டொலர் மதிப்புமிக்க ஆதரவை வழங்க அமெரிக்கா உறுதியளித்துள்ளது.
“போர் எவ்வாறு முடிவுக்கு வரும் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் உக்ரைனின் தோல்வியுடன் அது நிறைவடையாது,” என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் குறிப்பிட்டார். எவ்வளவு காலம் எடுத்தாலும் அமெரிக்காவும் அதன் தோழமை நாடுகளும் உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கவுள்ளதாக அவர் கூறினார்.
இந்த புதிய அறிவிப்பின் மூலம் அடுத்த சில வாரங்களுக்கு உக்ரைனுக்கு தடங்கல் இன்றி ஆயுதங்கள் செல்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பீரங்கி, ஹொவிட்ஸர்கள், வெடிமருந்துகள் மற்றும் மூலோபாய ஆளில்லா விமானங்கள் அடங்குகின்றன. தவிர, உக்ரைன் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மைக்கு உதவும் வகையில் அமெரிக்கா 500 மில்லியன் டொலர் நேரடி பொருளாதார உதவியை வழங்கவுள்ளதாகவும் பைடன் அறிவித்துள்ளார்.
மேலும் பல பில்லியன் டொலர் உதவியை வழங்க கொங்கிரஸின் அனுமதியை கோரவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
0 Comments