அமெரிக்காவின் சான் அன்டோனியோவில் (San Antonio) வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த கண்டெய்னர் லொறியிலிலுந்து 46 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்க நேரப்படி, திங்கள் மாலை 6 மணியளவில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கண்டெய்னர் லொறியிலிருந்து அழுகுரல் கேட்டு, பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
பொலிஸார் கண்டெய்னர் லொறியை திறந்து பார்த்தபோது, அங்கே 46 பேர் சடலங்களாகக் கிடந்தனர். 16 பேர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். உடனடியாக மீட்புப் பணிகள் நடைபெற்றன. மீட்கப்பட்ட 16 பேரில் 4 பேர் குழந்தைகள் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 சக்கரம் கொண்ட அந்த கண்டெய்னர் லொறி மூலம், வெளிநாடு தப்ப நினைத்த 100-க்கும் மேற்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள், கண்டெய்னருக்குள் காற்று இல்லாமை மற்றும் கூடுதல் வெப்பம் காரணமாக உயிரிழந்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
0 Comments