Ticker

6/recent/ticker-posts

விபத்தில் உயிரிழந்த ரஷ்ய பெண்ணும்.. பின்னணியில் உள்ள சோகமும்..


காலி, உனவடுன பிரதேசத்தில் முச்சக்கரவண்டி விபத்தில்

உயிரிழந்த ரஷ்ய பெண்ணின் இளம் மகளை ஏற்றுக்கொள்ள எவரும் முன்வரவில்லை என்ற துக்ககரமான தகவல் வெளியாகி உள்ளது..

உயிரிழந்த பெண்ணும் அவரது இளம் மகளும் உனவடுன பிரதேசத்தில் தங்கியிருந்தமை தற்போது தெரியவந்துள்ளது.

ரஷ்ய பெண் தனது நான்கு வயது மகளை நேற்று (01) பராமரிப்பு நிலையத்தில் இறக்கி விட்டு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த துரதிர்ஷ்டவசமான விபத்தை சந்தித்துள்ளார்.

இவர்களுக்கு இலங்கையில் உறவினர்கள் எவரும் இல்லை எனவும், தூதரகத்தின் ஊடாக உறவினரை தொடர்பு கொள்ளும் வரை சிறுமி சிறுவர் காப்பகத்தில் தடுத்து வைக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று காலை உனவட்டுன பிரதேசத்தில் பெலியத்தவிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த ரஜரட்ட ரஜின புகையிரதத்தில் முச்சக்கர வண்டி மோதியதில் ரஷ்ய பெண்ணும் அதன் சாரதியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

முச்சக்கரவண்டி சாரதி கவனக்குறைவாக முச்சக்கரவண்டியை புகையிரத தண்டவாளத்தின் ஊடாக செலுத்தியதாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

புகையிரத கடவையின் எச்சரிக்கை சமிக்ஞை அமைப்பு செயலிழந்துள்ளதாகவும், முச்சக்கரவண்டியை முன்னோக்கி செலுத்த வேண்டாம் என சம்பவத்தின் போது அங்கிருந்தவர்கள் கூறிய போதும் சாரதி அதனை புறக்கணித்து புகையிரத பாதையை கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது ரயிலில் மோதிய முச்சக்கரவண்டி தீப்பிடித்து முற்றாக எரிந்து நாசமானது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபராதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments